DMK BJP: அதிமுக பாஜக கூட்டணி அமைத்ததிலிருந்து பல முக்கிய தலைவர்கள் திமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் புதுவித புயலை கிளப்பியுள்ளார். அதாவது வரும் நாட்களில் திமுகவிலிருக்கும் முக்கிய தலைகள் பாஜகவில் இணைய போவதாக தெரிவித்துள்ளார். இவர் அவ்வாறு கூறியதும் அரசியல் வட்டாரத்தில் யார் அந்த முக்கிய தலை என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
தற்சமயம் திமுகவில் எந்த பதவியும் இல்லாமல் தனது பேச்சுக்காக தண்டிக்கப்பட்டு டம்மியாக ஒருவர் உள்ளார். அவரேனும் பாஜகவில் இணைவாரா என வியூகிக்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல மற்றொருவர், கட்சிக்குள் என்னை டம்மி அமைச்சராக வைத்திருந்தாலும் உனது மகனைப் போல் எனது மகனுக்கும் ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்ததற்கு கட்சிக்குள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான்.
இப்படி இருவரும் திமுக மீது அதிருப்த்தியில் உள்ள நிலையில் அவர்களை கட்சியிலிருந்து தூக்கி விடலாம் என்ற பிளானில் பாஜக இறங்கியுள்ளதா கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரும் திமுகவில் முக்கிய அங்கம் என்பதால் இவர்களை திமுகவிலிருந்து தூக்கும் போது கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும். மேலும் பாஜவில் முக்கிய தலைகள் இணைய ஸ்டாலின் விட மாட்டார் என்றும் பேச்சு அடிப்பட்டு வருகிறது.