BJP TVK: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆரம்ப கட்டத்திலிருந்து பாஜகவிற்கு மிகப்பெரிய ஆதரவளித்து வருகிறார். ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மாற்றி அமைத்ததில் இருந்து தற்போது வரை மிகவும் நல்ல தலைவர் மோடி தான் என கூறுகிறார். அப்படி இருக்கையில் தற்போது ரஜினியை சினிமா பயணம் 50 ஆண்டுகளை கடந்துவிட்டது.
அந்த வகையில் 171 வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி வெளியாகி வெற்றி நடை போடுகிறது. ரஜினி 50 ஆண்டுகளைக் கடந்ததால் சினிமா வட்டாரங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மோடி தனது எக்ஸ்ட்ராத்தில் இது ரீதியாக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பதிலளித்து ரஜினியும், உங்களிடமிருந்து வாழ்த்து பெற்றது மிகவும் சந்தோஷம்.
மேலும் நீங்கள் தான் ஆகச்சிறந்த நல்ல தலைவர் என்றும் பாராட்டினார். இவ்வாறு இருக்கவே சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரசுக்குள் வருவதாகவும் கூறினார். பின்பு அரசியல் பயணம் சரி வராது எனக் கூறி பின் வாங்கினார். அப்படி இவர் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தால் கட்டாயம் பிஜேபி வசம் தான் இருப்பார் என்பதில் எந்த ஒரு மாறுதலும் இல்லை. அந்த வகையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் ரஜினி நேரடியாக சந்தித்து வாழ்த்து கூறி வந்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் எட்டு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ரஜினிகாந்த் ஆதரவு பாஜகவுக்கு தான் என்பதை வெளிகாட்டும் விதமாக இவையனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். மேலும் தேர்தல் சமயத்தில் நட்சத்திர பேச்சாளராக கூட களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏனென்றால் விஜய்க்கு எதிரான மிகப்பெரிய ஜாம்பவானை இறக்க வேண்டுமென்றால் இவர்தான் சரியான ஆள் என்று மோடி தீர்மானித்துள்ளாராம்.
வரும் நாட்களில் விஜய்க்கு எதிராக ரஜினி இருப்பார் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.