PMK ADMK:பாமகவில் ராமதாஸ் உடைய பொதுக்குழு கூட்டமானது வெற்றிகரமாக இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழுவின் பின்னணியில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து வெளிப்படையாகவே கூறியுள்ளனர். அதாவது பெரும்பாலும் இந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரை வெளியேற்றாமல் அவருடைய பவரை மட்டும் பறித்துள்ளனர். சொல்லப்போனால் கட்சிக்குள் டம்மியாக்கி வைத்துள்ளனர்.
முதலில் பொதுக்குழு கூட்டம் தொடங்கப்பட்ட போது அன்புமணிக்கு என்று ஒரு இடம் ஒதுக்கப்படும் என நினைத்திருந்தனர். ஆனால் அந்த இடத்திற்கு காந்திமதி அமர்ந்தபட்டது அனைவருக்கும் வியப்பை உண்டாக்கியது. அந்த வகையில் அன்புமணியை நீக்கிவிட்டு அதற்கு நேர் எதிராக தனது மகள் காந்திமதியை இறக்குவது அப்பட்டமாக காட்டிவிட்டார். அதேபோல காந்திமதியின் மகன் முகுந்தனும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மூலையில் இருந்தார். அவரை அமர சொல்லியும் அமரவில்லை.
அதுமட்டுமின்றி இதில் அன்புமணிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடவடிக்கை எடுக்கும்படி தீர்மானமும் வரையறுத்துள்ளனர். இதனையெல்லாம் நீக்குவது வெகு தொலைவில் இல்லை. மேலும் முகுந்தனுக்கு அடுத்த பெரிய வாய்ப்பு காத்துள்ளதாக கூறுகின்றனர். அச்சமயத்தில் கூட்டத்திலிருந்த அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி என்று கூச்சலிட்டுள்ளனர். தற்போது பாமகவின் தலைவராக ராமதாஸ் உள்ள நிலையில் கூட்டணி குறித்து உங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும் என்ற ஹின்டையும் கொடுத்துள்ளார். அதன் மூலம் வரும் நாட்களில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.