அதிமுக திமுக வாக்குகளை பிளக்க விஜய்யின் பக்கா ஸ்கெட்ச்!! உச்சக்கட்த்தை நெருங்கும் மாநாடு!!

0
150
Vijay's plan to get AIADMK DMK votes!!
Vijay's plan to get AIADMK DMK votes!!

TVK: தமிழக அரசியல் களத்தில் விஜய் நுழைந்ததிலிருந்து வாக்கு வங்கி பிரியும் என்பதை உணர்ந்து மாற்றுக் கட்சியினர் பல திட்டங்களை தீட்டி உள்ளனர். தற்போது விஜய்யின் மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. இவரின் கொள்கை அடிப்படையில் அம்பேத்கர், ஈவேரா, அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை தாண்டி இந்த மாநாட்டில் வேறு இரு தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதாவது அதிமுகவின் எம்ஜி- ஆரும் திமுகவின் அண்ணாவும் இருக்கின்றனர். கடந்த முதல் மாநாட்டில் தனது கொள்கை தலைவர்களை தெரிவிக்கும் வகையில் மிகவும் பெரிய கட் அவுட்கலை வைத்திருந்தார். தற்போது அவர்களின் புகைப்படங்களை சிறுதாக்கி திமுக அதிமுகவின் கொள்கை தலைவர்களை விஜய் பெரிதாக நிறுவியுள்ளார். இது ரீதியாக பரபரப்பான பேச்சுத்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் உலாவுகிறது.

கடந்த மாநாட்டில் தனது அரசியல் எதிரி திமுக-வும் கொள்கை எதிரி பாஜக என கூறியது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தனது அரசியல் எதிரியின் கொள்கை தலைவரையே தற்போது தனது மநாட்டில்  நிறுவியுள்ளார். இதன் மூலம் அதிமுக திமுக என இரு வாக்குகளையும் தன் வசப்படுத்த நினைக்கிறார் என்பது இதிலிருந்து தெரிந்துக்கொள்ள முடிகிறது.

திமுக மீது மக்கள் மிகவும் அதிருப்தியாக உள்ள நிலையில் அதனையும், அதிமுக பாஜக கூட்டணி விரும்பாதவர்களையும் ஒரே நிலையில் கூட்டமைக்கும் வகையில் பக்கா பிளான் போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ரீதியான அனைத்தும் நாளை நடைப்பெறப்போகும் மாநாட்டின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

Previous articleகாவல் நிலையங்களில் தொடரும் மரணங்கள் – திமுக வாக்குறுதிகள் காகிதத்தில் மட்டுமா??
Next articleமாநாட்டுக்கு முன் அதிரடி.. கடைசி நேரத்தில் வரப்போகும் உத்தரவு!! சதி திட்டத்தால் உடையும் கூட்டம்!!