TVK: தமிழக அரசியல் களமானது இன்று பரபரப்பான சூழலில் தான் உள்ளது. அதிமுக திமுக என்ற கோட்டையில் தற்போது புதியதாக விஜய் காலடி எடுத்து வைத்ததிலிருந்து வாக்கு வங்கியை சிதற வைக்க கூடாது என்பதில் தெள்ளம் தெளிவாக உள்ளனர். ஆனால் அதனை உடைக்கும் வகையில் தான் விஜய்யின் செயல்பாடுகள் உள்ளது. அந்த வகையில் முதல் மாநாட்டிலேயே தனது அரசியல் எதிரி கொள்கை எதிரி யார் என்பதை தெரிவித்துவிட்டார்.
அதுமட்டுமின்றி இரண்டாவது மாநில மாநாடானது மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை என்பது திமுகவின் கோட்டை என அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி அந்த இடத்திலேயே தனது இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். அதாவது தனது மாநாட்டின் வரவேற்பு கட்டவுட்டில் திமுகவின் கொள்கை தலைவரான அண்ணாவையும் அதிமுகவின் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தையும் பொறித்துள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் திமுக விஜய்யின் மாநாட்டில் ஏதேனும் இடர்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இறுதி கட்டம் எட்டும் வரை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் அவர்களின் தொண்டர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேல் குவிவார்கள் என்ற கணக்கீடு வெளிவந்துள்ளது. அதனை தடுக்கும் வகையில் மதுரைக்கு செல்லும் சாலைப் போக்குவரத்தை மாற்றம் செய்யலாம் எனக் கூறுகின்றனர்.
இவையனைத்தும் இன்று காலை 10 மணிக்கு மேல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாக்கி உள்ளது. போக்குவரத்து மாற்றத்தை கொண்டு வந்து மாநாட்டிற்கு கலந்து கொள்ளும் நிர்வாகிகளை சுத்த விடுவதும் மேலும் திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்களாம். முதல் மாநாட்டிலேயே அலாவதியான கூட்டத்தை கண்டு மாற்றுக் கட்சி அனைவரும் வியந்தனர்.
இதுவே அவருக்கு பக்க பலமாகவும் அமைந்தது. அதனை தடுக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது திமுக போக்குவரத்துக்கு மாற்றம் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தை தீட்டி உள்ளது.