TVK BJP: அதிமுக பாஜக கூட்டணி பிரிவதற்கு முக்கிய காரணமாக அண்ணாமலை இருந்ததால் மீண்டும் இணையும் போது அவர் பாஜகவின் தலைவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். அதேபோல அவரை நீக்குவதற்கு முன்பாக அவரை கட்சியை விட்டு விலகிக் கொண்டார். அவ்வப்போது கட்சி வேலைகளில் ஈடுபடுவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று மட்டுமே உள்ளார். இவருக்கு மத்திய அமைச்சரவையில் நல்ல பதவி காத்திருப்பதாக பல தகவல்கள் வெளியானது.
இதற்கு காரணம், அதிமுகவை கூட்டணியில் இருந்து கை கழுவி விட்ட பிறகு மூன்று சதவீத வாக்கு வங்கியை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தியது இவர்தான். இதனால் அவர் அமைச்சரவையில் இடம்பெறுபவர் என்று அமித்ஷாவால் பாராட்டு பெற்றவர். அப்படி இருக்கையில் கட்டாயம் மாநில தலைமையில் இடமில்லை என்றாலும் மத்திய தலைமையில் இடம் இருக்கும் என யூகித்தனர். ஆனால் இதெல்லாம் வதந்தி என்று வரும் நாட்களில் தான் தெரிந்தது.
தற்போது அனைத்து பேட்டிகளையும் தவிர்த்து வருகிறார். ஆனால் அதிமுகவிற்கு எதிராக கட்சிக்குள் வேலை பார்க்கிறார். எடப்பாடி யாரெல்லாம் ஒதுக்கினாரோ அவர்களையெல்லாம் கட்சிக்குள் இணைக்க இவர்தான் பாலம் போல் செயல்பட்டு வருகிறார். இது மேலும் கட்சிக்குள் நெருக்கடியை தருவதால் மேற்குவங்கத்தில் நடைபெற போகும் தேர்தலுக்கு இவரை பொறுப்பாளராக நியமிக்க உள்ளனர்.
இதனால் அவரின் முழு வேலைகளும் மேற்குவங்கத்தின் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு தான் இருக்கும், தமிழகம் பக்கம் வர இனி எந்த வேலையும் இல்லை எனக் கூறுகின்றனர்.