கட்டாயம் இவர்களுடன் கூட்டணி இல்லை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அதிமுக!!

0
1035
There is no alliance with them!! AIADMK released an official announcement!!
There is no alliance with them!! AIADMK released an official announcement!!

ADMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய் எந்த ஒரு கட்சியும் விடாமல் அனைவரையும் நேரடியாகவே விமர்சனம் செய்திருந்தார். அந்த வகையில் அதிமுக கட்சி குறித்து பேசும்போது, இந்த கட்சியை உருவாக்கியது எம்ஜிஆர் ஆனால் அதன் நிலைமை தற்பொழுது எப்படி உள்ளது என்று நாம் பார்க்கிறோம். அந்தத் தொண்டர்களால் எதையும் வெளியில் சொல்ல முடியவில்லை எனக் கூறியதோடு, உலக மகா ஊழல் கட்சி என்றும் சுட்டிக்காட்டி பேசியிருந்தார்.

இந்த மாநாட்டிற்கு முன்பு வரை அதிமுக பாஜக நிலைப்பாட்டை கண்டு, வரும் நாட்களில் விஜய்யுடன் எடப்பாடி கூட்டணி வைப்பார் என்று பேசி வந்தனர். ஆனால் இந்த மாநாட்டின் மூலம் அதன் முடிவு தெரிந்து விட்டது. கட்டாயம் நடைபெறப்போகும் சட்டமன்றத் தேர்தலில் இவர்கள் கூட்டணி இருக்காவே இருக்காது. மாறாக தேமுதிக பாமக போன்ற கூட்டணிகள் இடம் பெறலாம். ஏனென்றால் விஜயகாந்தை அண்ணா என்றும் மாற்று கட்சி என பாமகவை குறித்தும் எதுவும் வாய் திறக்கவில்லை.

மேற்கொண்டு விஜய் பேசியதற்கு எதிராக எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். அதில், கட்சி தொடங்கியதும் ஆட்சி அமைக்க முடியாது, அவர் அறியாமையில் பேசுகிறார் அதேபோல யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்கலெல்லாம் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்தி தொடங்கிக் கொள்கிறார்கள். அதேபோல மக்களுக்கு எந்த ஒரு இயக்கமும் உடனடியாக நன்மை செய்து விட முடியாது என்றும்  சினிமாவில் பேசுவது போல டயலாக் வசனம் பேசுகிறார்கள். நாங்கலெல்லாம் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்.

அரசியலைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்து மட்டுமே நல்ல இடத்தை பெற முடியும் என்று கூறினார். மேற்கொண்டு அதிமுகவின் மூத்த தலைவர் ஒருவரிடம் விஜய்யுடன் இனிவரும் நாட்களில் கூட்டணி இருக்குமா என கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர், அதிமுகவை விமர்சனம் செய்யும் எந்த ஒரு கட்சியுடன் கூட்டணி இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். இதன் மூலம் அதிமுக விஜய் கூட்டணி ஒருபோதும் ஒத்துப்போகாது என்பது தெரிகிறது.

Previous articleஇனி இங்கு உனக்கு வேலை இல்லை.. அண்ணாமலையை தமிழகத்திலிருந்து விரட்டும் பாஜக!!
Next articleஅதிமுக-வின் முதுகில் குத்தும் பாஜக.. கூட்டணிக்குள் உச்சக்கட்ட பரபரப்பு!!