TVK BJP: தமிழ்நாடு 2026 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் , கூட்டணி குறித்த முடிவுகளும் , ஆலோசனைகளும் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராயப்படுகிறது. அ.தி.மு.க. வும் -பா.ஜ.க வும் கூட்டணியில் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணி முறிந்தால், பா.ஜ க -வும், நம் தமிழர் கட்சியும் இணைந்து ஒரு கூட்டணி அமைத்து, அதில் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக ஒரு புதிய கருத்து வெளியாகி உள்ளது.
பீகாரில் நடந்ததை போல ,தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக சீமானை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. விஜய் அரசியலில் கால் பதித்த முதல் நாளிலிருந்தே அவருக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அ.தி.மு.க.- வும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து கூட்டணி அமைத்தால் ,அது நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்பது உறுதி என்ற கணிப்பும் வெளியாகி உள்ளது.
தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் விலகி த.வெ.க உடன் இணைந்தால் , த.வெ.க கட்சி வெற்றி பெற அது சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நா.த.க மற்றும் த.வெ.க தனித்து போட்டியிட்டாலும், அ.தி.மு.க. – பா.ஜ.க இணைந்து போட்டியிட்டாலும் தேர்தலில் தோல்வியை தழுவ வாய்ப்புள்ளது. தி.மு.க. அரசின் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக அதனுடன் இருக்கும் கூட்டணி கட்சிகள் சிதற வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்படுகிறது.
இவ்வாறான பல்வேறு நிலைமைகள் தமிழக அரசியலில் நிலவுவதால் , எந்த கட்சி எதனுடன் இணையும் , எது தேர்தலில் வெற்றி பெரும் என்ற அனைவரின் எதிர்பார்ப்பும் அதிகமாக எழுந்துள்ளது. 2026 – சட்டமன்ற தேர்தல், தமிழக அரசியலில் வரலாறு காணாத ஒரு புதிய இடம் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.