தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்னும் எண்ணத்தோடு அ.தி.மு.க செயல்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் ஆட்சியை மாறி மாறி பிடித்த அ.தி.மு.க மற்றும் தி.மு.க, என்ற நிலை மாறி தற்போது த.வெ.க மற்றும் தி.மு.க என்ற நிலை உருவாகியுள்ளது.
அ.தி.மு.க மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. அ.தி.மு.க -வில் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா இருந்த காலத்தில் ஆட்சியை தன் வசம் வைத்திருந்தனர். தற்போது சற்று நிலை தடுமாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அ.தி.மு.க தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், அந்த கட்சியில் உட்கட்சி பூசலும் , ஒபிஸ் யின் பிரிவு, பா.ஜ.க உடன் சரியான சமநிலை இல்லாதது போன்றவை அ.தி.மு.க வை வலுவிலக்க செய்துள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட வாய்ப்புள்ளது. அது நடந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க வை ஆட்சியிலிருந்து விலக்கி தமிழகத்தை காக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சுற்றுப் பயணம் என்று கூறியிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு இந்த பிரச்சாரங்கள் வழிவகுக்குமா? கட்சி சந்திக்க போகும் சவால்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.