தமிழகத்தை விட்டு வெளியேறும் அண்ணாமலை!! மத்தியிலிருந்து வந்த அதிரடி உத்தரவு!!

0
993
annamalai-is-leaving-tamil-nadu-action-order-from-the-center
annamalai-is-leaving-tamil-nadu-action-order-from-the-center

BJP ADMK: தமிழக பாஜகவில் அண்ணாமலையின் பங்கானது இன்றியமையாதது என்றே கூறலாம். அதுல பாதாளத்தில் இருந்த வாக்கு சதவீதத்தை முன்னுக்கு கொண்டு வந்ததின் முக்கிய பங்கு இவரையே சாரும். அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலில் கூட அதிமுகவை பின்னுக்கு தள்ளு பாஜக பல இடங்களில் இரண்டாம் இடம் வகித்ததை பார்க்க முடிந்தது. ஆனால் இவர்கள் தனித்தனியே நின்றால் திமுகவிற்கு எதிரான ஆட்சியை கொண்டுவர முடியாது என்ற காரணத்தினால் மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டனர். இதனால் அண்ணாமலை வெளியேற நேரிட்டது.

தமிழகத்தில் எந்த ஒரு பதவியும் கொடுக்காவிட்டாலும் டெல்லி மத்தியில் இவருக்கு மிகப்பெரிய பொறுப்பு காத்திருப்பதாக கமலாலய வட்டாரங்கள் பேசி வந்தனர். அது கூடிய விரைவிலேயே நடைபெற போவதாக கூறுகின்றனர். பாஜகவின் தேசிய தலைவராக தற்போது இருக்கும் ஜே பி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்தும் நீட்டித்து வைத்துள்ளனர். இதற்கு முக்கிய பாஜகவுடன் இணைந்து ஆர்எஸ்எஸ் முடிவெடுக்காதது தான்.

ஆனால் தற்போது அடுத்த பாஜக தேசிய தலைவர் யார் என்பதை தேர்வு செய்து விட்டதாகவும், கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர். அச்சமயத்தில் அண்ணாமலைக்கான பதவி என்ன என்பதும் தெரிய வருமாம். அதாவது தேசிய தலைவரை தாண்டி அதற்கு கீழ் இருக்கும் முக்கிய பொறுப்புகளுக்கு தலைவர்கள் நியமன தரவரிசையில் தயார் நிலையில் வைத்துள்ளார்களாம்.

அதில் அண்ணாமலைக்கு மத்திய பொதுச் செயலாளர் பதவியை ஒதுக்கிருப்பதாக கூறப்படுகிறது. இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறுகின்றனர்.

Previous articleஇந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (Q1) வளர்ச்சி! எதிர்பார்ப்புகளை மீறிய உயர்வு