PMK: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது வரை தீர்வு கிடைக்காமல் இருந்து வருகிறது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே திடீரென்று ராமதாஸின் இரண்டாவது மனைவியுடன் 50 வது திருமணம் நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அறிந்தும் அறியாமலும் பேசிய தகவலை தற்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளனர்.
மேலும் பாமக பொதுக்குழு கூட்டத்தை அப்பா மகன் இருவரும் தனித்தனியாக நடத்தினர். இதில் ராமதாஸ் நடத்திய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிரான 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். இந்த கோரிக்கையின் பெயரில் அன்புமணிக்கு இந்த தீர்மானம் குறித்து பதிலளிக்க கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் அன்புமணி எந்த பதிலும் அளிக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
இவ்வாறு அவர் நடந்து கொள்வது மரியாதை அற்ற தன்மை எனக் கூறி இது ரீதியாக இன்று தைலாபுர தோட்டத்தில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணியை கட்சியை விட்டு நீக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி அன்புமணி கட்சியை விட்டு நீக்கும் பட்சத்தில் பாமக வை ஒத்து அன்புமணி வேறு கட்சி ஆரம்பிக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் அப்பா மகனுக்கிடையே இருமுனை போட்டி நிலவும்.