தேர்தல் அதிர்ச்சி: அபாயத்தில் அதிமுக.. சிதறும் வாக்குகள்!! இனி எதிர்கட்சிக்கு கூட வாய்ப்பில்லை!!

0
384
Election shock: AIADMK in danger.. scattered votes!! Even the opposition has no chance!!
Election shock: AIADMK in danger.. scattered votes!! Even the opposition has no chance!!

ADMK: தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்றத் தேர்தலால் தற்போதே அரசியல் களமானது அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இம்முறை விஜய் போட்டியிட உள்ளதால் வாக்கு வங்கியில் பெரும் மாற்றத்தை காண முடியும். இதனை சமநிலைக்கு கொண்டு வரவே திமுக மற்றும் அதிமுக என இருவரும் அடிமட்டத்திற்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர். இதர கட்சிகளை காட்டிலும் அதிமுக கட்சிக்குள்ளேயும், கூட்டணியிலும் பல சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இவை அனைத்தையும் சட்டமன்றத் தேர்தல் தொடங்குவதற்குள் சரி செய்யவில்லை என்றால் கட்டாயம் பின்னுக்கு தள்ளப்படுவது உறுதி. பின்பு எடப்பாடிக்கு போட்டியாக ஸ்டாலின் இருக்க மாட்டார் மாறாக சீமானுடன் போட்டி போடும் நிலை வந்துவிடும். இது ரீதியாக பெங்களூரு புகழேந்தி கூறுகையில், அதிமுக கட்சியை முறையாக நிலை நிறுத்தவில்லை என்றால் கட்டாயம் அரசியல் கட்சிகள் வரிசையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அதேபோல இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கும் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி இன்னும் ஆட்டத்தில் தான் உள்ளது என கூறியுள்ளார்.

அவ்வாறு அவர் கூறுவதற்கு முக்கிய காரணம், அதிமுகவின் அடையாளம் மற்றும் அரசியல் பலமாக பார்க்கப்படும் சின்னத்தை மீட்பதை வைத்து தான் தேர்தலில் அங்கம் வகிக்க முடியும். இல்லையென்றால் அதிமுக – வுக்கென்றே இருக்கும் பாரம்பரிய வாக்குகள் சிதைந்து புதிய அரசியலுக்கு இடமளிக்கும் வாய்ப்பை இவர்களே அமைத்து கொடுக்க நேரிடும். இதனால் எடப்பாடியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு ஒவ்வொன்றும் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.

Previous articleபரபரக்கும் பாமக சண்டை: அன்புமணிக் பதவிக்கு வேட்டு வைக்கும் ராமதாஸ்.. உச்சத்தை எட்டும் அதிகார மோதல்!!
Next articleஎடப்பாடியை ஒரேடியாக கட்டம் கட்டும் பாஜக.. விழி பிதுங்கும் எடப்பாடி!! ரீ எண்ட்ரியில் சசிகலா டிடிவி!!