
India America: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரியை விதித்துள்ளார். இது உலக அளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நீதிமன்றமே இது சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பு என உத்தரவிட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், நாம் இன்னும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதுதான். அதிலும் நம் நாட்டைப் போல சீனாவும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கித்தான் வருகிறது.
ஆனால் அந்த நாட்டின் மீது இப்படி எந்த ஒரு அழுத்தத்தையும் ட்ரம்ப் கொடுக்கவில்லை. ஆனால் நம் நாட்டை மட்டும் குறி வைத்து இவ்வாறான தாக்குதலை நடத்தி வருகிறார். இவரின் இந்த அறிவிப்பிற்கு எதிராக அமெரிக்காவுக்குள் பலரும் போர்க்கொடியை தூக்கி உள்ளனர். அந்த வகையில் அமெரிக்காவை கைவிட்டு விட்டு ரஷ்யா, சீனா உடன் இந்தியா கைகோர்த்துள்ளது. மேலும் ரஷ்யா சீனா உடன் அமெரிக்காவின் பரம எதிரியான வடகொரியா அதிபரும் இணைந்துள்ளார்.
இது ட்ரம்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எப்படி அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை கொடுத்து உதவுகிறதோ, அதேபோல வட கொரியா களத்தில் இறங்க முன்வந்துள்ளது. இவர்களின் இந்த கூட்டணியினால் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பெரும் இழப்பீடை சந்திக்க நேரிடும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. நாளை சீனாவில் ராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என்பது குறித்து அமெரிக்க அதிபர் பெருமளவில் எதிர்பார்த்து காத்து உள்ளாராம்.
இவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது குறித்து தற்போது தனிக்குழு அமைத்து ஆலோசனையும் செய்து வருவதாக கூறுகின்றனர்.