ஓ.பி.எஸ் யை தொடர்ந்து அ.ம.மு.க வின் தலைவரும் ,பொதுச் செயலாளருமான டி.டி.வி தினகரனும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழக பா.ஜ.க வின் தலைவரான நாயனார் நாகேந்திரன் ஒரு பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பா.ஜ.க வில் இருப்பதை உறுதி செய்திருந்தார். பா.ஜ.க வில் கூட்டணியிலிருந்து பிரிந்து இணைந்த எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க விடம் சில கோரிக்கைகளை முன் வைத்ததாக கூறப்படுகிறது.
அதில் ஒன்று டி.டி.வி தினகரன், சசிகலா , ஓ.பி.எஸ் மூவரையும் கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதாகும். ஆனால் நாயனார் நாகேந்திரன் இவ்வாறு கூறியது எடப்பாடி பழனிசாமிக்கு கோபத்தை வரவழைக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறி வந்தன. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கும் , பா.ஜ.க விற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான பணிகளில் அணைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், பா.ஜ.க வில் இருந்து பிரிந்தது பா.ஜ.க விற்கு பெரும் இழப்பாக உள்ளது. இதனை தொடர்ந்து பேசிய டி.டி.வி தினகரன் சட்டமன்ற தேர்தல் தொடர்பான அ.ம.மு.க வின் நிலைப்பாடு குறித்து டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறியதோடு , எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக சாடியிருந்தார். துரோகத்தின் மொத்த உருவமாக உள்ள எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் , அவரின் அகங்கார ஆணவ பேச்சு முறியடிக்க பட வேண்டும் என்றும் கூறினார். இது ஒரு புறம் இருக்க அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மனம் திறந்து பேச போவதாக கூறி இருக்கிறார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ் , டி.டி.வி தினகரன், செங்கோட்டையன் மூவரும் இணைய வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறுகின்றன. தற்போது டி.டி,வி தினகரன், தி.மு.க வுடன் கூட்டணி அமைப்பாரா, அல்லது த.வெ.க உடன் கூட்டணி அமைப்பாரா , இல்லை தனித்து செயல்படுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாகி உள்ளது. இவர்கள் மூவரும் இணைந்தால், இவர்களுடன் சசிகலாவும் இணைய அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.