ADMK: அதிமுகவின் மூத்த தலைவரும் முக்கிய நிர்வாகிமான செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை இணைக்க வேண்டும் எனக் கூறி பத்து நாட்கள் கெடு விதித்துள்ளார். இந்த பத்து நாட்களில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அதிமுக பிளவு குறித்து அதிருப்தியில் இருப்பவர்களை வைத்து வெளியேறியவர்களை மீண்டும் இணைக்க முயற்சி செய்வோம்.
அதுமட்டுமின்றி எடப்பாடியின் சுற்றுப்பயணம் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் கட்சிக்குள் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இவரை அடுத்து தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியே வந்ததோடு செங்கோட்டையனை போலவே இவரும் முக்கிய அறிவிப்பு குறித்து பேசுவதாக கூறியிருந்தார். அக்கணமே அனைவரும், இவர்கள் இணைந்து ஏதோ ஒரு கூட்டணியை அமைக்க தாயராகி விட்டனர் என வியூகிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அதுபோலவே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தினகரன் கூறியதாவது, செங்கோட்டையன் எடுத்த முயற்ச்சியானது மிகவும் நல்லது அவருக்கு உறுதுணையாக இருப்போம் என கூறியதோடு, பாஜக எங்களை துக்கடா கட்சியாக பார்க்க நினைக்கிறது. அதுமட்டுமின்றி நயினார் நாகேந்திரன் வந்த பிறகு தான் ஓபிஎஸ் வெளியேற நேரிட்டது என்றெல்லாம் பேசினார்.
இவர்களின் இந்த பேட்டியின் பரபரப்பு குறைவதற்குள் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டார். அதில், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் செங்கோட்டையனை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இது ஒட்டு மொத்த அரசியல் நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.