எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் எடுத்த மூவ்.. ஆடிப்போன தலைமை!!

0
631
Sengottaiyan's move against Edappadi.. Shaking leadership!!
Sengottaiyan's move against Edappadi.. Shaking leadership!!

ADMK BJP: அதிமுக கட்சிக்குள் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் அடுத்தடுத்த நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு விதித்த கெடு முடிவதற்குள் அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார். மேற்கொண்டு தனி அணி உருவாகும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். செங்கோட்டையனுக்கு பின்னணியில் சசிகலா தினகரன் ஓபிஎஸ் என அனைவரும் இருப்பது தெரிகிறது. இதனால் ஒன்றுபட்ட அதிமுகவை விரும்புபவர்கள் ஒரு புதிய கூட்டணியை கூட அமைக்கலாம்.

ஆனால் ஒன்றுபட்ட அதிமுக தான் வேண்டும் என்பதில் செங்கோட்டையன் தீவிரமாக இருப்பதாக தெரிவித்தார். திடீரென்று ஹரிதுவார் கோவிலுக்கு மன நிம்மதிக்காக டெல்லி செல்கிறேன் என செய்தியாளர்கள் முன்னிலையில் கூறியிருந்தார். ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்துள்ளார். ஏன் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு பாஜக முக்கிய தலையை சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது?? பாஜக- வோ அதிமுகவுடன் கூட்டணி வைத்ததிலிருந்து முன் நெருக்கம் காட்டிய அனைத்து நிர்வாகிகளையும் ஒதுக்கி வைத்து வருகிறது.

அப்படித்தான் ஓபிஎஸ்-க்கு மோடியை காண நேரம் கூட ஒதுக்கவில்லை. இதனின் ஒட்டுமொத்த வெளிப்பாடு தான் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. அப்படி இருக்கையில் கட்சியிலிருந்து நீக்கிய செங்கோட்டையன் அமித்ஷாவை சந்தித்தது சற்று குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ரீதியாக செங்கோட்டையன் பதிலளிக்கும் போது தான் என்னவென்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

Previous articleசெங்கோட்டையனின் அடுத்த வியூகம் என்ன? ஒருங்கிணைப்பு பணியா? புதிய கட்சியா?
Next articleஎடப்பாடிக்கு ஷாக் கொடுத்த அமித்ஷா.. செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தந்த பாஜக தலைமை!!