ADMK: தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்பது பா.ஜக-விற்க்கு நீண்ட காலமாக இருந்து வரும் பெரிய ஆசையாக உள்ளது. தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளையும் பா.ஜ.க செய்து வருகிறது. ஆனால் அந்த செயல்பாடுகள் அனைத்தும் தவிடுபொடியாகி வருகின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி தினகரனும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதற்கு காரணமாக அவர் கூறிவதாவது, நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே கூட்டணியை விட்டு வெளியேற காரணம் என்றும், நாங்கள் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்மென்றே நயினார் நாகேந்திரன் திட்டமிட்டு செயல்படுவதாக குற்றம் சாட்டினார். கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி தான் எடுப்பார் என்று கூறும் இடத்தில் நாங்கள் எவ்வாறு இருக்க முடியும்? என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை எங்கள் பின்னால் இல்லை, வெளியேறவேண்டுமென்பது எங்களின் முடிவு என்றும் கூறினார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க- வில் உட்கட்சி பிரச்சினைகள் எழுந்து வருவதால், அ.தி.மு.க-விலிருந்த சிலர் பா.ஜ.க-விற்கு செல்ல போவதாகவும், முக்கிய தலைவர்கள் அங்கு சென்றால் அவர்களின் முகமாக அறியப்பட்டு வரும் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படும்.
இது நிகழ்ந்தால் அ.தி.மு.க- எதிர்கட்சியாக கூட உருவாக முடியாத நிலை ஏற்படுமென்றும் சொல்லப்படுகிறது. இது நடைபெறவிடாமல் தடுக்க தான் அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜ.க சொல்கிறது என்ற வாதமும் வந்த வண்ணம் உள்ளன. அதுவே பா.ஜ.க அ.தி.மு.க- வுடன் முக்கிய தலைவர்களை ஒருங்கிணைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தால், தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு அ.தி.மு.க கூட்டணி மட்டுமே போதாது. செங்கோட்டையன், சசிகலா உடன் ஓ.பி.ஸ், டி.டி.வி தினகரன், மீண்டும் இணைந்தால் தான் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணியில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது.