ADMK BJP: அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தாலும் கட்சிக்குள்ளேயே பனிப்போர் நடைபெற்ற வருகிறது. பாஜக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அதிமுக வரவேண்டும் என நினைக்கிறது. ஆனால் இது நடக்காத காரியம். ஆரம்பத்தில் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவருக்கு எதிரான டிடிவி தினகரன் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை ஒதுக்கியே வைத்தது. ஆனால் கட்சிக்குள் மற்றொரு மூத்த தலைவரை வைத்து மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது.
அந்த வகையில் செங்கோட்டையன் ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் எனக் கூறியதோடு எடப்பாடிக்கு பத்து நாள் கெடு வைத்தார். அந்த பத்து நாளுக்கு சரி பதிலடி கொடுக்கும் விதமாக அவரை அடிப்படை பதவியிலிருந்தே எடப்பாடி நீக்கம் செய்தார். பதவி நீக்கிய ஓரிரு தினங்களிலேயே செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய மந்திரி, நிதியமைச்சர் என அனைவரையும் சந்தித்து ஆலோசனையும் பெற்று வந்துள்ளார்.
அதிமுக கட்சியிலிருந்து நீக்கிய வரை பாஜக சந்திப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிலிருக்க அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற ஆதரவு பாஜக மத்தியில் உள்ளது. ஆனால் எடப்பாடி இந்த அரவணைப்புக்கு ஒருபோதும் ஒத்து வரவில்லை. இதனால், முக்குலத்தோரின் வாக்கு எனத் தொடங்கி செங்கோட்டையனின் கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பெரும்பான்மையான இடங்களிலும் வாக்கு வாங்கி சிதறக்கூடும். இதனால் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கருத்து.
ஆரம்ப கட்டத்தில் எடப்பாடியின் போக்கில் விட்டு விட்டு பின்பு நமக்கு ஏற்றார் போல் கட்சியை வடிவமைத்துக் கொள்ளலாம் என நினைத்துள்ளனர். ஆனால் அது சாத்தியமற்றது. அதிமுகவின் நிலையற்ற தன்மையை பயன்படுத்தி பாஜக முன் வந்து விடலாம் என்று நினைக்கிறது. இதனால் தான் ஆரம்பத்தில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது போல் இருந்துவிட்டு தற்பொழுது கூட்டணிக்குள்ளேயே எதிரான வேலைகளை பாஜக செய்து வருகிறது.