PMK: பாமக தற்போது இரண்டு அணிகளாக பிரிந்து உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அதன் முழு அங்கீகாரத்தையும் அன்புமணிக்கு கொடுத்துள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அன்புமணி மற்றும் ராமதாஸ் சார்பாக இரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இருவரும் நடத்திய பொதுக்குழுவின் தீர்மானங்களை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தனர். இதில் யாருடைய பொதுக்குழு கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் பச்சைக்கொடி காட்டும் என்று விமர்சனம் செய்து வரும் போதே அன்புமணியை கட்சியை விட்டு ராமதாஸ் நீக்கிவிட்டார்.
ஆனால் நேற்று அன்புமணியின் பொதுக்குழு தான் செல்லும் எனவும் 2026 வரை அவர் தான் தலைவர் அவர் எடுக்கும் முடிவுகள் தான் இறுதி எனக் கூறி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளதாக வழக்கறிஞர் பாலு கூறினார். இதனை ராமதாஸ் அணியினர் சிறிதும் கூட ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு இடத்திலும் ராமதாஸ் தான் தலைவர் என்று குறிப்பிடவில்லை. அப்படி இருக்கும்போது கட்சிச் சின்னம் மற்றும் அதன் முடிவுகளை பறிக்கவே இப்படி செய்கின்றனர் என தனது கொந்தளிப்பை எம்எல்ஏ அருள் வெளிப்படுத்யுள்ளார்.
மேலும் இது ரீதியாக அவர் கூறுகையில், 46 வருடமாக இந்த இயக்கத்தை கட்டி காத்து வந்த நிறுவனரிடமிருந்து பறிக்க நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த கட்சிக்காக 21 பேர் உயிர்த் தியாகமும் செய்துள்ளனர். அப்படி இருக்கையில் வழக்கறிஞர் பாலு பொய்யான தகவலை பரப்பி வருகிறார். இதனால் கட்சி கொடி சின்னம் என எதையும் ஆக்கிரமிக்க முடியாது. இது ரீதியான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராமதாஸ் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.