PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனுக்கிடையே அதிகார மோதல் போக்கானது தீரா பிரச்சனையாக உள்ளது. இது முதலில் முகுந்தனிடமிருந்து தான் ஆரம்பித்தது. தற்சமயம் தனது அதிகாரத்தை மேலோங்க செய்ய அன்புமணியை டம்மியாக்கி உட்கார வைக்க ராமதாஸ் நினைத்தார். அதனால் அவரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து அதரடி உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து அவருக்கு ரிவென்ஜ் கொடுக்கும் பெயரில் அன்புமணி தான் 2026 வரை தலைவர், இதனை தேர்தல் ஆணையமே கூறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏறப்டுத்தியது. இதனையெல்லாம் பார்த்து கட்சி தனது கை மீறி போவதை உணர்ந்த ராமதாஸ் உடனே அமித்ஷா வை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இதன் மூலம் தனக்கு அதிகாரம் மட்டும் வேண்டும், மற்ற முடிவெடுத்தல் உள்ளிட்டவற்றை பாஜக வசம் தாரைவார்த்துக்கொடுக்க தயாராகி விட்டார். கிடத்தட்ட அதிமுக-வை போல, ஆனால் பாஜக மேலிடம் ஆரம்பக்கட்டத்திலிருந்து அன்புமணிக்கு ஆதரவாக இருந்து வருவதால் ராமதாஸுக்கு அந்த வரவேற்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் தான்.
கடந்த சில தினங்களாக பாஜக வை ஓரங்கட்டிவிட்டு திமுக-வை அரவணைத்து பேசி வந்ததன் விளைவு தான் இது, ஆனாலும் வேறு வழியின்றி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர பாஜக-வை நாடியுள்ளார். இச்சமயம் பாமக எம்எல் ஏ அருள், அன்புமணிக்கு பின்புலத்தில் யாரோ சொல்லி தருகிறார்கள், அப்பா பேச்சை கேட்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என கூறியுள்ளார்.
பாஜக ராமதாஸுக்கு சப்போர்ட் செய்யும் பட்சத்தில் அன்புமணி அவர் பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும், இல்லையெனில் தனிக் கட்சி தொடங்க வேண்டியது தான்.