வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?

0
174

வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா?பீதியில் கட்சியினர்?

உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனாத் தொற்று அரசியல் பிரமுகர்களையும் விட்டு வைக்கவில்லை.கடந்த இரு தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் மற்றும் நேற்று அமைச்சர் தங்கமணிக்கும் தொற்று உறுதிச் செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் தொற்றுக்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில் இன்று அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூக்கும் கொரோனாவா என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் வட்டாரம் அலறிப்போய் நிற்கிறது. கட்சி சார்ந்த அத்தனை பேரும் தினமும் கொரோனா டெஸ்ட் செய்துவருகின்றனர்.அமைச்சர் தங்கமணியின் மனைவி, மகன், மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாழும் விஞ்ஞானியாக கருதப்படும் அமைச்சருக்கே கொரோனாவா? பீதியில் கட்சியினர்?
அதேபோன்று, செல்லூர் ராஜூவின் மனைவிக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதியாகிவிட்ட நிலையில் இப்போது இவருக்கும் தொற்று உறுதிச் செய்யப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous articleஆண் வேடமிட்டு 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 35 வயது பெண்;!பெற்றோர்கள் அதிர்ச்சி?
Next articleதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி விருது வழங்கி கௌரவித்த அமெரிக்கா!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here