சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி.! 1950 ஆம் ஆண்டிலுருந்து தொடர் வெற்றி.!!

0
150

சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 10 மாதங்கள் இருந்த நிலையில், பிரதமர் லீ முன்னதாகவே பொதுத் தேர்தலை நடத்த அறிவித்தார். இதையடுத்து கொரோனாவின் ஆபத்தான நிலையிலும் சிங்கப்பூர் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக 26.5 லட்சம் மக்கள் வாக்கு செலுத்தியுள்ளனர். சிங்கப்பூரில் வாக்குரிமை உள்ளவர்கள் அனைவரும் வாக்கு செலுத்த வேண்டியது கட்டாயமாகும். கொரோனா பாதிப்பினை தடுக்க முககவசம்  வழங்கி, சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களித்தனர்.

இதையடுத்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தமான 93 இடங்களில் 83 இடங்களை மக்கள் செயல் கட்சி வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. எதிர்க்கட்சியான ஒர்க்கர்ஸ் பார்ட்டி கட்சி 10/இடங்களில் மட்டுமே வென்றது. 1950 ஆம் ஆண்டில் இருந்தே மக்கள் செயல் கட்சி தொடர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறது. தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களுக்கு பிரதமர் லீ செய்ன் லூங் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா காரணத்தால் வாக்கு குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டி பேசினார்.

Previous articleசிரிப்பூட்டும் நைட்ரஸ் ஆக்சைடு மருந்தை அதுக்கு பயன்படுத்துகிறார்கள்;!!அதனால் இந்த மருந்திற்கு தடை விதித்த அரசு?
Next articleகூகுள் நிறுவனத்தின் புதிய முயற்சி; பலூன் வழியாக இணைய சேவை