கொரோனா பாதிப்பால் தமிழ்நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பாட புத்தகங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளியிலேயே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிவிப்பில் எந்த நாட்களில் புத்தகங்களை பெற மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி தலைமை முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய குறிப்பு :
* ஒவ்வொரு பள்ளியிலும் குறிப்பிட்ட தினத்தில் ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் என்கிற அடிப்படையில் சமூக இடைவெளியுடன் பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும்.
* கொரோனா பாதிப்பால் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் இருக்கும் மாணவர்கள் கொரோனா பாதிப்பு நீங்கிய பிறகு அவரவர் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.