பிச்சை எடுத்த 50 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய அதிசய மனிதர்.!!

0
167

தூத்துக்குடி ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவியின் மறைவிற்கு பிறகு பொது சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிச்சை எடுக்கும் பணத்தை பல்வேறு பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்து வருகிறார்.

 

கடந்த மே மாதம் தனக்கு கிடைத்த 10 ஆயிரம் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். அதன் பிறகு தொடர்ந்து நான்கு முறை 10,000 வீதம் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இதுவரை ஒட்டுமொத்தமாக 50,000 ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

 

சுயநலம் இல்லாமல் மக்களுக்காக பண உதவி செய்யும் முதியவர் பாண்டியனை பலரும் மனதார பாராட்டி வருகின்றனர். இவர் தமிழகத்தில் புயல் பாதிப்பு நேர்ந்த போதும் மக்களுக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Previous articleசெமஸ்டர் தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்த இயலாது; முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம்
Next articleஇந்தியா-சீனா மோதலில் டிரம்ப் அதரவு இந்தியாவிற்கு கிடைக்குமா?அமெரிக்கா முன்னாள் ஆலோசகரின் கருத்து