விஜய்யின் கடைசி குரல்.. உலகம் முழுதும் டிரெண்டாகும் தளபதி கச்சேரி!!

0
121
Vijay's last voice.. Thalapathy concert is trending all over the world!!
Vijay's last voice.. Thalapathy concert is trending all over the world!!

Jananaayagan: தளபதி விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ‘தளபதி கச்சேரி’ இன்று வெளியாகி ரசிகர்களிடையே புயல் கிளப்பியுள்ளது. அனிருத் இசையமைத்த இந்த பாடல், விஜய்யின் குரலில் வெளிவந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தெருக்குரல் அறிவு எழுதி,அனிருத் இசை மற்றும் சேகர் மாஸ்டர் கொரியோகிராஃபி – என மூன்றும் சேர்ந்து மாஸ்டர் பீஸாக உள்ளது.

எச். வினோத் இயக்கும் ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பீஸ்ட் படத்திற்குப் பிறகு இவர்களின் இரண்டாவது கூட்டணி இது. பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் இந்த படத்தின் மூலம் சினிமாவிலிருந்து முழுவதுமாக விலகி  அரசியலில் களமிறங்க உள்ளார் என்பதால், ஜனநாயகன் படம் குறித்து ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. 2026 பொங்கல் ரிலீஸுக்காக காத்திருக்கும் இந்த படம், ஏற்கனவே ரூ.260 கோடியை கடந்த ப்ரீ-ரிலீஸ் பிசினஸால் சாதனை படைத்துள்ளது.

தற்போது ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் மில்லியன் கணக்கான பார்வைகளை குவித்து வருகிறது. விஜயின் குரலும் நடனமும் ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டத்தை தற்போதிலிருந்தே ஆரம்பித்துவிட்டனர். இந்த பாட்டில் சமூக நெறி கருத்து குறித்து விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆரம்பித்த ஆட்கடத்தல் வார்.. அதிமுக-வின் முக்கிய தலையை லாக் செய்த திமுக!!