“H-பைல்ஸ்” என்ற பெயரில் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ போலி பிரச்சார நாடகம் — வெளிச்சத்துக்கு வந்த உண்மை 

0
115

2024 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பெரிய அளவில் போலி வாக்காளர் அட்டைகளை வைத்து கள்ள ஒட்டு போட்டது நடந்துள்ளது” என்று கூறிய ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை சரிபார்ப்பில் நொறுங்கி விட்டன. அவரின் “H-பைல்ஸ்” எனும் ஆவணங்களில் கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டும், சரிபார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பொய்யாகி விட்டது.

பலமுறை வாக்களித்ததாக கூறிய பொய்யான குற்றச்சாட்டு

ராகுல் காந்தி தனது முதல் குற்றச்சாட்டில், ஒரு வயதான பெண்ணின் பெயர் 220 முறை வாக்காளர் பட்டியலில் இருப்பதாக கூறினார். இது “பெரிய அளவில் வாக்காளர் நகல் பதிவு” என சித்தரிக்கப்பட்டது.

அவர் குறிப்பிட்டது ஹரியானா மாநிலத்தின் முலானா தொகுதி – தாகோலா கிராமம். 2019 இல் அங்கு ஒரு வாக்குச்சாவடி மட்டுமே (பூத் 63) இருந்தது. 2024 தேர்தலுக்காக வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அந்த பூத் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடைமுறையாகும்.

ஆனால் ராகுல் காந்தி அதையே “220 முறை ஒரே நபர் பெயர்” என தவறாக விளக்கினார்.இதில் மிகவும் ஆச்சரியமானது என்னவெனில் — அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிதான் வென்றுள்ளது! அதாவது, “முறைகேடு நடந்தது” என அவர் கூறிய இடத்தில் காங்கிரஸே வெற்றி பெற்றுள்ளது. இது அவரது குற்றச்சாட்டின் நோக்கத்தையே சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) குறித்து இரட்டை நிலை

ராகுல் காந்தி கூறிய இரண்டாவது குற்றச்சாட்டு — “எக்சிட் போல்கள் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தும், முடிவுகள் மாற்றப்பட்டன” என்றது.

ஆனால் எக்சிட் போல்கள் புள்ளியியல் அடிப்படையில் நடக்கும் கணிப்புகள்; அவை எப்போதும் ±3% பிழை எல்லை கொண்டவை.அதே ராகுல் காந்தி 2014, 2019, 2024 ஆரம்பத்தில் இவை “பாஜக புரொப்பகண்டா கருவிகள்” எனச் சாடியவர்.
ஆனால் காங்கிரஸுக்கு சாதகமாக சில எக்சிட் போல்கள் வந்தவுடன் அவையே “உண்மை” எனக் கூறுவது அவரது இரட்டை முகத்தை வெளிப்படுத்துகிறது.

வாக்குச் சீட்டு பற்றிய தவறான விளக்கம்

“பேலட் பேப்பரில் காங்கிரஸ் முன்னிலை, ஆனால் இறுதியில் தோல்வி; இதுவே மோசடி” என ராகுல் காந்தி கூறினார். ஆனால் உண்மை என்னவெனில் — ஹரியானாவில் பேலட் பேப்பர் வாக்குகள் மொத்த வாக்குகளில் 0.57% மட்டுமே.
அதாவது, 99% வாக்குகள் EVM வழியாக பதிவு செய்யப்பட்டவை.அதில் 0.5% வாக்குகளை வைத்து “முழு தேர்தல் மோசடி” என கூறுவது புள்ளியியல் அடிப்படையில் பொருளற்றது.

மேலும், தேர்தல் ஆணையத் தரவுகள் காட்டியது — நான்கு தொகுதிகளில் (ஜுலானா, ஹாதின், நங்கல் சௌத்ரி, ஆதாம்பூர்) பாஜக தான் பேலட் வாக்குகளில் முன்னிலை பெற்றிருந்தும் இறுதியில் தோல்வியடைந்தது.அதாவது, அவர் கூறிய மாதிரி மோசடி நடந்திருந்தால் பாஜக முன்னிலை ஏன் இழந்தது?

திருத்தப்பட்ட வீடியோ – முதலமைச்சர் சைனியை தவறாக சித்தரித்தது

ராகுல் காந்தி, ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி கூறிய “எங்களுக்கு எல்லா ஏற்பாடுகளும் உள்ளன” என்ற ஒரு வரியை வெட்டி “வோட் சோரி ஏற்பாடு” என விளக்கினார்.

ஆனால் அந்த முழு வீடியோவில் சைனி பேசியதாவது,

“நாங்கள் கூட்டணி தேவையில்லை; பாஜக தனியாக ஆட்சி அமைக்கும். அதற்கான அரசியல் ஏற்பாடுகள் எங்களிடம் உள்ளன” என்றே குறிப்பிட்டிருந்தார்.

இது கள்ள ஓட்டு போன்ற தேர்தல் முறைகேடு குறித்ததல்ல; அரசியல் தன்னம்பிக்கையை குறித்தது. முதலமைச்சர் பின்னர் அதற்காக ராகுல் காந்தியை “தெளிவான பொய் கூறியவர்” எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.

குறைந்த வித்தியாசத்தில் தோல்வி — ஆனால் அதுவே மோசடி சான்றா?

ராகுல் காந்தி, எட்டு தொகுதிகளில் 22,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது “தேர்தல் முறைகேடுகளின் சான்று” என கூறினார். ஆனால் ஹரியானாவின் 10 குறைந்த வித்தியாச போட்டிகளில் காங்கிரஸ் 6, பாஜக 3 வென்றுள்ளது.

இதுபோல் நெருக்கமான வாக்கு வித்தியாசம் எந்த மாநிலத் தேர்தலிலும் சாதாரணம்.
எ.கா., 2018 மத்தியப்பிரதேசத்தில் பாஜக பல இடங்களில் 1,000 வாக்குக்கு குறைவாக தோற்றது — அப்போது யாரும் மோசடி என கூறவில்லை.

போலியான வாக்காளர் குற்றச்சாட்டு

ராகுல் காந்தி கூறியது — “ஒரு பெண் 10 வாக்குச்சாவடிகளில் 22 முறை வாக்களித்தார்.”ஆனால் இது உண்மையல்ல. வாக்காளர் பட்டியலில் சில பெயர்கள் மீண்டும் வருவது, இடம் மாறுதல், எழுத்துப்பிழை அல்லது நிர்வாக பிழை காரணமாகும். இவை ஒவ்வொரு தேர்தலுக்கும் முன் Special Revision Drive மூலம் திருத்தப்படுகின்றன.

மேலும், எந்தப் பூத்திலும் காங்கிரஸ் முகவர்கள் இதுபோன்று எந்தவித புகாரும் பதிவு செய்யவில்லை. எல்லா வாக்குச்சாவடிகளிலும் CCTV பதிவுகள் 45 நாட்களுக்கு பாதுகாக்கப்பட்டன; ஆனால் காங்கிரஸ் எந்த சட்டப்பூர்வ புகாரும் தரவில்லை.
இதைப் பார்த்தால், இது தேர்தல் முடிந்த பின் முடிவுகளை குறை கூறும் நாடகம் மட்டுமே என தெளிவாகிறது.

“25 லட்சம் போலி வாக்காளர்கள்” என்ற பொய்யான எண்

ராகுல் காந்தி கூறியது — “8 பேரில் ஒருவர் போலியான வாக்காளர்” என்றது.
ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு மொத்தம் 5 புகார்கள் மட்டுமே வந்தன; அனைத்தும் உடனே தீர்க்கப்பட்டன. நூற்றுக்கணக்கான காங்கிரஸ் முகவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு செயல்முறையை கண்காணித்தனர். அதாவது, எந்த “மோசடியும்” நடக்கவில்லை.

பிரேசில் மாடலின் புகைப்படம் – கற்பனைக்கு அப்பாற்பட்ட பிழை

ராகுல் காந்தி தனது ஊடகச் சந்திப்பில் “ஒரே பெண்ணின் புகைப்படம் பல வாக்காளர் அட்டைகளில் பயன்படுத்தப்பட்டது” என்று கூறி, அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காட்டினார்.ஆனால் அந்தப் புகைப்படம் இந்திய பெண்ணின் அல்ல; பிரேசில் நாட்டைச் சேர்ந்த ‘லாரிஸ்ஸா நேரி’ என்ற மாடலின் புகைப்படம்.

லாரிஸ்ஸா அதனை கண்டதும் தனது சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை வெளியிட்டு கூறியதாவது,

“எனது புகைப்படத்தை இந்திய அரசியல் பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார்கள்; இது வெறும் பைத்தியம்!” என்று சிரித்துக்கொண்டே கூறினார். அவரின் படம் ஸ்டாக் போட்டோ தளங்களில் இருந்தது, அங்கிருந்து யாரோ எடுத்துக் காங்கிரஸ் பிரச்சாரத்தில் சேர்த்துள்ளனர்.

இருப்பினும், காங்கிரஸ் டிஜிட்டல் குழுவினர் அதே புகைப்படத்தை தொடர்ந்து பரப்பினர்; சிலர் “பிரேசில் சுற்றுலா பரிசு” என்று கூட நகைச்சுவையாக வெளியிட்டனர். இது உண்மைக்கு புறம்பான பிரச்சாரம் என்பதை வெளிப்படுத்தியது.

இளைஞர்களை பயமுறுத்தி அரசியல் பலம் பெறும் முயற்சி

நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் நடந்த இளைஞர் போராட்டங்களுக்குப் பிறகு, ராகுல் காந்தி இந்திய இளைஞர்களிடமும் அதே உணர்வை தூண்ட முயன்றார்.
“தேர்தல் திருட்டு” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி புதிய வாக்காளர்களை உணர்ச்சி ரீதியாக பாதிக்க முயன்றார்.ஆனால் இந்திய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள்; இப்படியான நாடகங்களால் எளிதில் மயங்கமாட்டார்கள்.

ஹோடல் தொகுதி குறித்த அரை உண்மைகள்

ராகுல் காந்தி கூறியது — “ஒரே வீட்டில் 501 போலி வாக்காளர்கள்” என்று.
ஆனால் உண்மை என்னவெனில் அந்த வீடுகள் ஒரே குடும்பத்தின் பல தலைமுறைகள் வசிக்கும் பெரிய சொத்துகள்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வீட்டு எண் கீழ் பதிவு செய்யப்பட்ட legitimate வாக்காளர்கள்.அவர்கள் 80 ஆண்டுகளாக அங்கிருந்தே வசித்து வருகிறார்கள்.

அதேபோல், “265 வது வீட்டு எண் – 501 வாக்காளர்” என்ற இடம், உண்மையில் பல குடும்பங்கள் வசிக்கும் பெரிய நிலப்பகுதி; பல சிறு வீடுகளும் பள்ளிகளும் அதே சொத்து எண்ணைப் பகிர்ந்து கொண்டுள்ளன.

“H-பைல்ஸ்” முழுவதும் நாடகம்

ராகுல் காந்தியின் அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையற்றவை, புள்ளிவிவரங்களைக் கடுமையாக வளைத்து கூறப்பட்டவை.
அவர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பொய் குற்றச்சாட்டு மற்றும் திசை திருப்புதல் மூலம் மக்கள் மனதை குழப்ப முயன்றுள்ளார்.

ஹரியானா தேர்தல்கள் முழுமையாக வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடைபெற்றுள்ளன.தேர்தல் ஆணையம், வாக்கு முகவர்கள், மற்றும் கண்காணிப்பு குழுக்கள் அனைத்தும் ஒரே முடிவைச் சொல்லுகின்றன.

“மோசடி எதுவும் நடக்கவில்லை; ஆனால் உண்மையை திரித்து காட்டும் அரசியல் நாடகம் இதன் மூலமாக நடந்தது.”

ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டு, ஒரு ஜனநாயகத்தைக் காப்பாற்றும் முயற்சி அல்ல. அதை நம்பிக்கையிழக்கச் செய்யும் திட்டமிட்ட முயற்சி. இதன் மூலமாக உண்மையை மறைத்து பொய்யை திணிக்கும் பிரச்சாரத்திற்கான நாடகம் நடைபெற்றுள்ளது.

Previous articleமதிமுகவை அட்டாக் செய்யும் இபிஎஸ்.. அப்செட்டில் வைகோ!! குஷியில் அதிமுக!!