TVK: தமிழக வெற்றிக் கழகம் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அரசியல் பயணத்தில் முன்பை போல செயல்பட முடியவில்லை. குறிப்பாக ஆளும் கட்சி விஜய்யை முடக்கி உட்கார வைக்க வேண்டுமென்று பல முயற்சிகளை செய்தனர். ஆனால் தனது அரசியல் சார்ந்த வேலைகளை தொடர்ந்து விஜய் செய்து தான் வருகிறார்.
அதிலும், தமிழகத்தில் ஆறு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது கட்சிக்கான சின்னத்தை ஒதுக்க கோரி தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்துள்ளது. அந்த வகையில் தேர்தல் ஆணையம் 181 சின்னங்களை வெளியிடும். இதில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு ஏற்ப 10 சின்னங்களை தேர்வு செய்து முன்கூட்டியே தரவேண்டும்.
அதிலும் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கும் சிறப்பு சலுகைகள் உண்டு. அப்படி இருக்கையில் தற்போது அந்த 181 சின்னங்களில் மக்களுக்குள் இணக்கமாகும் வகையில் மட்டைப்பந்து, ஆட்டோ, கடிகாரம் உள்ளிட்டவைகளை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மனுவை இணை பொதுசெயலாளரான சிடி ஆர் நிமல் குமார் மேலும் பல முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இணைந்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ளனர்.
மேற்கொண்டு அவர்கள் சின்னம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை செய்து தேர்ந்தெடுப்பர். இனி வரும் நாட்களில் இது ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டால் தான் இவர்களுக்கு ஒதுக்கிய சின்னம் உறுதி செய்யப்படும்.

