TVK:தமிழகத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலானது இம்முறை நான்கு முனை போட்டிகளை கடந்து நடைபெற இருக்கிறது. அதிமுக திமுக மட்டும் தான் என கால் பதித்து வந்த நிலையில் புதிய கட்சியாக உருவெடுத்த தவெக-வும் அமைந்துள்ளது. மற்ற புதிய கட்சியினருக்கு கிடைத்த வரவேற்பை விட இவருக்கு சற்று அதிகமே. இந்த கட்சியை ஒழிக்க வேண்டும் என்பதில் ஆளும் கட்சி பல உள்வேலைகளை செய்தது. அந்த வகையில் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
கிட்டத்தட்ட 41 பேர் உயிரிழந்த நிலையில் ஆளும் கட்சி விஜய்-க்கு எதிராக போர் கொடி தூக்கியது. அதே சமயத்தில் தாவெக சார்பாக அனைத்து கட்சி பணிகளும் துவண்டு கிடந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து கூட்ட நெரிசலில் உயிரிழிந்த அவர்களை நேரில் சந்தித்து பேசினார். மேற்கொண்டு இது ரீதியாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆதாவ் அர்ஜுனா பேசியது குறித்து விஜய் பெரும் கோபத்தில் உள்ளாராம்.
தமிழக வெற்றி கழகத்தின் கோட்பாடுகளை கடந்து பேசியுள்ளதால் இருவருக்கும் இடையே தனிப்பட்ட வாக்குவாதம் நடந்துள்ளதாம். மேற்கொண்டு இதே போல் மேடைகளில் பேசினால் கட்டாயம் கட்சியை விட்டு நீக்கப்படுவீர் என்று விஜய் எச்சரித்துள்ளாராம். இது ரீதியான தகவலானது தமிழக வெற்றி கழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இனி வரும் நாட்களில் ஆதவ்வின் நடவடிக்கைகளை வைத்து விஜய் கொடுத்த வார்த்தைக்கு மதிப்புள்ளதா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

