ADMK: எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகிறார். கட்டாயம் இந்த தேர்தலில் மாற்ற வேண்டும் என்று எண்ணி பல செயல்முறைகளை நடைமுறைப்படுத்துகிறார். அந்த வகையில் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலர் பரிந்துரை செய்தும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக விஜய், சீமான், பிரேமலதா விஜயகாந்த் கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார்.
அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. அனால் இவர்களின் கூட்டணி பேச்சு வார்த்தையானது ஆரம்ப கட்டத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதில் கரூரில் 41 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தனக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்தது போல அந்த சம்பவத்தில் இபிஎஸ் ஆதரவு தெரிவித்ததால் அனைவரது கவனமும் இவர்களது கூட்டணி குறித்து தான் இருந்தது. ஆனால் விஜய் ஒருபோதும் ஒத்துப்போகாமல் பழைய நிலைப்பாட்டில் தான் கட்சி செயல்படும் என்று தெரிவித்துவிட்டார்.
இதனால் வருத்தமடைந்த எடப்பாடி அதிமுக-வையே மீண்டும் வலுப்படுத்தலாம் என்ற நோக்கில் உள்ளார். அந்தவகையில் தினகரன் ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு டம்மி பதவி வழங்கி ஓட்டுக்காக மட்டும் கட்சிக்குள் ஓரமாக உட்கார வைக்க திட்டமிடுகிறாராம். இதற்கெல்லாம் ஒத்து வரும் பட்சத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்று அதிமுக கட்சிக்குள் சில முக்கிய தலைகள் பேசி வருகின்றனர். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் வெளியேறியவர்கள் தங்களுக்கு எந்த பதவி வழங்கப்படுகிறது என்பதை பார்த்து தான் தான் முடிவெடுப்பார்கள் என்று மற்றொருபுரம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

