TVK PMK: தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் அசாம்பாவிதத்திற்கு பிறகு அவரின் வருகை ஆளும் கட்சியை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இதை வைத்து பலரும் அவருடன் நெருக்கம் கட்ட முயற்சித்து வருகின்றனர். அதிலும் அதிமுக, தனித்தனி ஒப்பந்தம் போட்டு கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று கூட விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதில் இரு சவால்கள் உள்ளது.
முதலாவது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது, இரண்டாவது தலைமை யாருக்கு என்பதுதான். தற்போதைக்கு இதன் முடிவு எட்டப்படாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாற்று கட்சியினர் அவருடன் கூட்டணி வைக்க முயற்சிக்கின்றனர். அந்த வகையில் பாமக கட்சியை விட்டு நீக்கிய அன்புமணி ராமதாஸ் அவரை தொடர்பு கொண்டுள்ளாராம். எனது அப்பாவை நம்பி அரசியலில் எதையும் செய்ய முடியாது, உங்களுடன் சேர்ந்தால் பலம் வாய்ந்த கூட்டணியாக மாறி ஆளும் கட்சி உள்ளிட்டவர்களை எதிர்க்கலாம். எனக்கூறி உள்ளாராம்.
கட்சியை நிறுவின தனது அப்பாவையே எதிர்த்து நிற்கும் சமயத்தில் பெரும் ஆதரவு இவருக்கு தேவைப்படுவதோடு அவரின் முன் வெற்றி பெற்று காட்ட வேண்டும் என்று முனைப்பும் உள்ளது. இவையனைத்தும் குறைந்த கட்ட கால அளவில் நடக்க வேண்டுமென்றால் நல்ல கூட்டணியுடன் அச்சாரம் போட வேண்டும். அந்த காரணத்தினால் திமுகவை தனது எதிரியாக நினைக்கும் விஜய்யை கூட்டாளியாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரகசிய பேச்சுவார்த்தையை ராமதாஸ் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

