ADMK: எம்ஜிஆர் காலகட்டத்திலிருந்து கட்சியிலிருக்கும் செங்கோட்டையன் தற்போது நீக்கப்பட்டது பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியது. முதலமைச்சர் பொறுப்பு வரை இவர் பெயரும் ஒரு காலத்தில் பரிந்துரை செய்யப்பட்டது தான். அதன் பிறகு எடப்பாடியின் மவுசு அதிகரிக்கவே கட்சியில் இவரை ஓரங்கட்ட ஆரம்பித்தனர். அதிலும் சமீப நாட்களாக இவருக்கு பின்வந்த அமைச்சர்களுக்கு கொடுத்த மரியாதை கூட தனக்கு கொடுக்கவில்லை என்பதுதான் இவரின் புலம்பல்.
நாளடைவில் எடப்பாடி சரிப்பட்டு வர மாட்டார் என எண்ணி, ஓபிஎஸ் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற குறள் ஓங்க ஆரம்பித்தது. அனைவரும் ஒரு வரிசையில் இருக்க இவர் மட்டும் தனித்து நிற்கும் போது எடப்பாடி கட்சிக்குள் வைத்திருப்பது சாத்தியமற்ற ஒன்றுதான். அந்த வகையில் செங்கோட்டையனை அனைத்து பதவிகளிலிருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதன்பிறகு பாஜக, எடப்பாடி மீது கோபமடைந்தது ஒரு பக்கம் இருந்தாலும், அதிமுகவில் முக்கிய தலைகள் அனைவரும் பிரிந்து செல்வது கட்சிக்கு நல்லதல்ல என அறிவுரை சொல்ல ஆரம்பித்தது. அதேபோல கட்சியிலிருந்து வெளியானவர்களிடமும் பேச முன் வந்தது. அப்படி செங்கோட்டையனை அழைத்து பல நிபந்தனைகளை பாஜக போட்டதாக தகவல்கள் வெளியானது. இது ரீதியாக செங்கோட்டையனிடம் கேட்டபோது, எனக்கு யாரும் எந்த நிபந்தனையும் போடவில்லை.
ஒருமுறை அதிமுக சார்பாக எனக்கு அழைப்பு வந்தது நான் சென்று அமித்ஷா வை சந்தித்தேன். மற்றொரு முறை நானாகத்தான் சென்று சந்தித்தேன். நாங்கள் என்ன பேசினோம் என்றெல்லாம் பேட்டியில் கூறினால் அரசியல் நாகரீகமாக இருக்காது. கூடிய விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும் என கூறினார். மேற்கொண்டு அதிமுகவில் இணைவீர்களா?? என்று கேட்டதற்கு, கட்சி மேலிடம்தான் அதன் முடிவெடுக்கும்.
அதுமட்டுமின்றி நீங்கள் சசிகலா தினகரன் மூவரும் சேர்ந்து விஜய்யுடன் கூட்டணி வைக்க சாத்தியமுள்ளதா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர். இது ரீதியாக இப்போது எந்த கருத்தையும் சொல்ல இயலாது எனக் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். அதிமுக பாஜக தரப்பிலிருந்து எந்த ஒரு எதிர் பதிலும் இல்லாத போது விஜய் பக்கம் இவர்கள் திரும்ப அதிக வாய்ப்புள்ளதாம்.

