70% ஓகே.. தயவு செஞ்சி வந்துருங்க.. அதிமுக-வில் இரட்டை தலைமை!! எடப்பாடியின் திடீர் முடிவு!??  

0
832
70% OK.. Dual leadership in AIADMK
70% OK.. Dual leadership in AIADMK

ADMK: அதிமுக மீண்டும் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என செங்கோட்டையன் முதல் ஓபிஎஸ் வரை பலரும் கூறி வருகின்றனர். ஆனால் இவர்களது  கூட்டணி குறித்து பேசினாலே எடப்பாடி, இருக்கும் நாற்காலியை காலி செய்து விடுகிறார். அப்படிதான் செங்கோட்டையனின் பதவியும் போனது. மேலும் பாஜக தலைமை முதல் அதிமுகவின் முக்கிய புள்ளிகள் வரை பலரும் எடப்பாடி இடம் இது ரீதியாக பேச்சாளர் நடத்திவிட்டனர்.

வெளியே கூட்டணிக்காக அலையும் நேரத்தில் இவர்கள் கூட்டணி உருவாக்கிக் கொண்டால் அதிமுக வாக்கு சிதறாது என்றும் தெரிவித்து விட்டனர். வருவதை வைத்து எதிர்க்கட்சியாக வந்தாலும் கூட இவர்களது கூட்டணி அறவே வேண்டாம் என எடப்பாடி பிடிவாதமாக உள்ளார். அவரையும் இவர்கள் விடுவதாகவே தெரியவில்லை. நேற்று கூட ஓபிஎஸ் கூறுகையில், மீண்டும் அதிமுக இணைவதற்கான பேச்சுவார்த்தை தினகரன் மற்றும் சசிகலாவிடம் நடந்து வருகிறது. கட்டாயம் இணையும் என்று தெரிவித்துள்ளார்.

வரும் நாட்களில் மனம்  எடப்பாடி ஒத்துப் போகும் பட்சத்தில் இவர்களுக்கெல்லாம் புதிய பதவி காத்தயுக்கியதாம். குறிப்பாக செங்கோட்டையனுக்கு முதல்வருக்கு நிகராக பவர் அமையுமாம். அவரை வைத்து தொடர் சசிகலா, எடப்பாடி பழனிசாமி என அனைவருக்கும் மவுசு இருக்கும் என கூறப்படுகிறது. விஜய் கூட்டணியை பெருமளவு எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடிக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிடைத்தது.

அச்சமயம் அதிமுக மீண்டும் காலூன்ற பெரிய ஆதரவை தேடுகிறது எனவும் பேசியுள்ளனர். ஆனால் யாருடைய கூட்டணி இன்றி எடப்பாடி அதிமுக-வை பலம் வாயிந்ததாக மாற்றலாம் என என்னியுள்ளராம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியை விட்டு விலக்கியாவர்களை கட்சிக்குள் இணைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் உள்ளாராம்.

Previous articleசளி இருமல் பிரச்சனை குணமாக வேண்டுமா! பூண்டு மற்றும் வெங்காயம் இருந்தால் போதும்!
Next articleஅதிமுகவுடன் கூட்டணியா.. தவெகவின் முக்கிய தலை பளிச் பதில்!!