சமீபகாலமாகவே உலகின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் இன்று அதிகாலை இந்தியாவின் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கம் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கமானது அந்தமான் பகுதியில் உள்ள டிகலிப்பூர் என்ற பகுதியில் ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த நிலநடுக்கத்தின் அளவு 4.3 ரிக்டராக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவியியல் ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து கூறியதாவது,சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் இதனால் மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளனர்.மேலும் இந்த நிலநடுக்கம் மியான்மர் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.