இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இந்த மாநிலத்தில் மட்டும் தீவிர பாதிப்பு!

Photo of author

By Jayachandiran

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரைமடைந்த கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவை உலுக்கி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,701 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 23,174 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

கடந்த 24 மணி நேரத்தில் 18,850 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அங்கு 10,289 பேர் உயிரிழந்த நிலையில் 1,40,325 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

 

இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருந்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில், 1,996 பேர் உயிரிழந்துள்ளனர். 89,532 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் டெல்லி மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது. 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் 3,371 பேர் உயிரிழந்துள்ளனர். 89,968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.