160 தொகுதி டிமாண்ட்.. எடப்பாடி முடிவால் ஷாக்கான பாஜக!! ஒட்டுமொத்தமாக நொறுங்கும் டெல்லி பிளான்!!

0
241
demand-for-160-seats-edappadis-decision-is-the-bjp-totally-collapsing-delhi-plan
demand-for-160-seats-edappadis-decision-is-the-bjp-totally-collapsing-delhi-plan
BJP ADMK: திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் வேலையில் பாஜக அதனை ஏறெடுத்து கூட பார்க்கவில்லை. தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவுக்குள் தொகுதி பங்கீடு பிரச்சனை இருந்து வருகிறது. ஒவ்வொரு மேடையிலும் கூட்டணி முறையில் ஆட்சி என பாஜக கூறி வருகிறது. ஆனால் எடப்பாடி ஆரம்ப கட்டத்திலிருந்து இதனை மறுத்து வருகிறார். அப்படி இருக்கையில் கிட்டத்தட்ட 160 தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தனி பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும்.
 
இதனால் மீதமுள்ள 74 தொகுதிகள் தான் பாஜக மற்றும் அதிமுகவுடன் இருக்கும் இதர கூட்டணிகளுக்கு பிரித்துக் கொடுக்க நேரிடும். ஒருபோதும் இதற்கு பாஜக ஒத்து வராது. தாங்கள்தான் தொகுதி பங்கீடு செய்வோம் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்பது குறித்து நாங்கள் சொல்லும் ஆலோசனை படித்தான் நடக்க வேண்டும் என கூறுகின்றனர்.
 
பாஜக வழி தொகுதி பங்கீடு நடந்தால் கட்டாயம் அது கூட்டணி ஆட்சி முறைக்கு தான் வழிவகுக்கும் என்பது எடப்பாடிக்கு நன்றாக தெரிந்த ஒன்று தான். இந்த காரணத்தினாலேயே தொகுதி பங்கீடு செய்யாமல் கூட்டணி கட்சிக்குள் இழுபறியாகி வருகிறது.
Previous articleபெரிய ட்விஸ்ட்.. உறுதியாகும் பாஜக+தவெக+அதிமுக கூட்டணி.. உச்சகட்ட பீதியில் ஸ்டாலின்!!
Next articleதிமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61% அதிகரிப்பு: தமிழகம் தன் இளைய தலைமுறையினரைக் கைவிடுகிறதா?