தமிழக மக்களுக்கு 5 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வேலை, வருமானம் இன்றி மக்கள் தவித்து வருவதால் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை காப்பாற்ற தமிழக அரசு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்றின் இக்கட்டான சூழலில் மக்களை காக்க வேண்டிய தலையாய கடமை அரசுக்கு உள்ளது. ஆகவே கூட்டுறவு நகைக்கடன் மற்றும் விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மின்கட்டண சலுகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment