பொதுவாகவே ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதுவும் செய்யமாட்டார்கள் இதற்கு காரணம் கெட்டது நடக்கும் என்ற அர்த்தமில்லை.இந்த மாதம் முழுவதுமே அம்மனுக்கு மிக மிக உகந்த மாதமாகும் சுபகாரியங்களில் நம் மனதை செலுத்தாமல் முழுவதும் தெய்வ வழிபாட்டிற்கு மட்டும் செலுத்துவதற்காக இம்மாதத்தில் எந்த சுபகாரியங்களும் நடத்தப்படுவதில்லை.
இதுமட்டுமின்றி ஆடி மாதம் பேய்கள் நடமாட்டம் இருக்கும் அதனால் வீட்டின் முன் வேப்பிலை தொங்கவிட வேண்டும் என்றும்,கணவன் மனைவி தாம்பத்தியம் கூடாது என்றும் நம் முன்னோர்கள் கூறி கேட்டிருப்போம்.
இது மூடநம்பிக்கை அல்ல இடையிலும் ஒரு அறிவியல் இருக்கின்றது.நம் பருவ கால நிலைகளில் ஆடி மாதத்தில் அதிகமாக காற்று வீசும் (ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்று கூறுவர்)அந்தளவுக்கு காற்றின் வேகம் இருப்பதால் நுண்கிருமிகள் காற்றின் வழியே பரவி நமக்கு நோயை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.வேப்ப இலை பொதுவாகவே கிருமிநாசினியாக செயல்படும். இதனால் வீட்டு முன் வேப்பிலையை கட்டி வைத்தால் காற்றின் மூலமாக வீட்டினுள் நுழையும் நுண்கிருமிகள் அழிக்கப்படும்.
அதுமட்டுமின்றி கணவன் மனைவி தாம்பத்தியம் கூடாது என்று சொல்லப்படுவதற்கான காரணம் இந்த மாதத்தில் கருத்தரித்தால் குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும்.சித்திரை மாதம் வெயில் அதிகமாக உள்ள காலமாகும்.எனவே தான் அது தாய்க்கும் சேய்க்கும் நல்லது இல்லை என்று இம்மாதத்தில் தாம்பத்தியம் கூடாது என்று கூறுவர்.
இதுமட்டுமின்றி ஆடி மாதத்தில் குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவுகள் எழுந்தாலும் அது அவ்வளவு நல்லதில்லை என்று கூறுவர். ஆடி போர்களத்தில் சண்டையிடக் கூடாது என்று கூறுவர்.இதற்கு காரணம் மகாபாரத போர் இந்த மாதத்தில்தான் நடந்ததாம்.எனவே நம் குடும்பத்தில் சண்டை வராமல் இருக்கவும் செல்வம் சேரவும் கீழே கூறப்பட்டிருக்கும் பொருட்களை கொண்டு தெய்வ வழிபாடு செய்தால் நன்மை பயக்கும்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் ஆடி 1 ஆம் தேதி அன்று உப்பும், மஞ்சளும்,அம்மனுக்கு உகந்த பட்டும் வாங்கி சக்கரை பொங்கல் இட்டு படைத்து மனதார வழிபட்டால் முழுமையான அம்மன் அருள் கிடைக்கும்.செல்வம் செழிப்பும் பெருகும்.