2100 ஆம் ஆண்டு மக்கள் தொகை 10 சதவீதமாக குறையும்: சீனா உலகின் முதல் நாடாக திகழும்!! லான்செட் ஆய்வுத் தகவல்

0
171

‘தி லான்செட்’ என்னும் மருத்துவ ஆய்விதழ் மிகவும் புகழ் பெற்ற இதழாகும். இதில் வரும் ஆண்டுகளில் மக்கள் தொகை எவ்வாறு இருக்கப் போகிறது என்னும் ஆய்வினை மேற்கொண்டு தற்போது ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் 2100-ம் ஆண்டு நாடுகளின் மக்கள்தொகை, பிறப்பு விகிதம், தனிமனித ஆயுட்காலம், பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்த ஆய்வை வெளியிட்டுள்ளது. அதில் 2100-ம் ஆண்டில் உலக மக்கள்தொகை 10 சதவீதம் குறையும் என்றும், குறிப்பாக 20 நாடுகளில் மக்கள்தொகை 50 சதவீதம் அளவில் குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

அந்த 20 நாடுகள்:

குறிப்பாக ஜப்பான், தாய்லாந்து, சீனா, இத்தாலி, போலந்து, ஸ்பெயின், தென்கொரியா, போர்ச்சுகல் உட்பட 20 நாடுகளில் மக்கள்தொகை 50 சதவீதம் அளவில் குறையும் என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது உலக மக்கள்தொகை 7.8 பில்லியனாக உள்ள நிலையில் 2064-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 9.7 பில்லியனாக உயர வாய்பு இருகிறது. ஆனால், 2100-ம் ஆண்டில் மக்கள்தொகை 8.8 பில்லியனாக குறையும் என்று அந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி 2100-ம் ஆண்டு குழந்தை பிறப்பு விகிதம் கணிசமாகக் குறையும். அதுமட்டுமின்றி தனி மனிதன் ஆயுட்காலம் அதிகமாகும். 25 சதவிதத்திற்கு மேல் 64
வயதானோர் எண்ணிக்கை 2100-ம் ஆண்டு இருக்கக் கூடும்.

எண்ணிக்கை வாரியாக மக்கள் தொகையின் விவரம் :

இந்தியாவின் மக்கள் தொகை 138 கோடியிலிருந்து 109 கோடியாகவும் சீனாவின் மக்கள்தொகை 140 கோடியிலிருந்து 73 கோடியாகக் குறையும்.
அதேசமயம் ஆப்பிரிக்க மற்றும் நைஜீரியா நாடுகளில் மக்கள்தொகை அதிகரிக்கும். அதுவும் நைஜீரியாவை பொருத்தமாட்டில் மக்கள்தொகை 3 மடங்குக்கும் மேலாக உயர நேரிடும். விரிவாக சொல்லப் போனால் தற்போது நைஜீரியாவின் மக்கள்தொகை 20.6 கோடியாக உள்ளது ஆனால் 2100-ம் ஆண்டில் மக்கள்தொகை 79 கோடியாக உயரும்.

தற்போது 32.5 கோடியாக இருக்கும் அமெரிக்காவின் மக்கள்தொகை 2062 ஆண்டில் 36.4 கோடியாக உயர்ந்து அதன் பின் 2100-ல் 33.6 கோடியாக குறையும். ஆனால் பொருளாதார அடிப்படையில் வைத்து பார்க்கும் போது 2035-ம் ஆண்டில் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடித்து 2098-ல் மீண்டும் அமெரிக்கா சினாவை பின் தள்ளி முதல் இடத்தைப் பிடிக்கும். என்று அந்த ஆய்வில் தெரிவித்துள்ளது தி லான்செட் இதழ்.

author avatar
Pavithra