கொரோனா நோயாளி திடீரென தப்பியோட்டம்! போலீசார் வலைவீச்சு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லால்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது நான்கு வயது மகன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து தந்தையும், மகனும் காணாமல் போனதால், மருத்துவமனை சார்பில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தப்பியோடிய நபரால் மற்றவருக்கு நோய்த் தொற்று உருவாகும் அபாயம் உள்ளதால் காவல்துறையினர் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதுவரை திருச்சியில் 1,814 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 1,020 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை திருச்சியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

 

திருச்சியில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை சமாளிக்க திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Leave a Comment