ஆஷிர்வாத் ஆட்டா மாவு பாக்கெட்டில் இருந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்.!

0
125

தெலுங்கானா மாநிலம் காமரெட்டி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் குப்தா என்பவர் வழக்கம்போல 5 கிலோ எடையுள்ள ஆஷிர்வாத் பிராண்ட் ஆட்டா மாவு பாக்கெட் வாங்கியுள்ளார். வீட்டிற்கு பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியாகியுள்ளார்.

 

உடனே சம்பந்தபட்ட மளிகை கடையில் சென்று கேட்டபோது, தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், தனக்கு பொருட்களை அனுப்பும் ஏஜெண்ட் அருண் என்பவரிடம் கேட்குமாறு கூறி மளிகை கடைக்காரர் சமாளித்துள்ளார். ஏஜெண்ட் அருணிடம் கேட்டபோது அவர் சரியான பதில் அளிக்காமல் மழுப்பியுள்ளார்.

இதையடுத்து உணவுத்துறை அதிகாரிகளுக்கு குப்தா நேரடியாக புகார் அளித்தார். இதனை அறிந்த அதிகாரிகள் நேரடியாக வந்து சம்பந்தபட்ட கடையிலும் பிற மளிகை கடைகளிலும் கோதுமையின் தரத்தை சோதிக்க மாதிரிகளை வாங்கிச் சென்றனர். கோதுமை பாக்கெட்டில் பல்லி இறந்துகிடந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

நவீன காலத்தில் பொருளாதாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் பாக்கெட் மாவுகளை வாங்கும் பழக்கத்தில் உள்ளனர். இனி பாக்கெட் பொருளாக எதை வாங்கினாலும் அதை கவனித்த பிறகு பயன்படுத்துங்கள். இயற்கை உணவு முறைக்கு மாறினால் இதுபோன்ற உணவுப் பொருட்கள் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.