குறித்த இலக்கை தாக்கும் ஏவுகணை:? போருக்கு தயாராகும் இந்தியா!! பீதியில் சீனா

0
134

இந்திய சீன பிரச்சனை சில நாட்களாக நடந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்
நிலை வருகின்றது.
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு , தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து இருநாடுகளும் படைகளை திரும்பப் பெற்றுள்ளன. இதனால் இரு நாட்டுக்கும் இடையிலான போர் பதற்றம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இருப்பினும் இரு நாட்டு போர் பதற்றம் நிகழ்வதால் இரு நாட்டு ராணுவங்கள் தயார் நிலையில் வைக்க ராணுவத் துறை முயல்கின்றது.இந்திய ராணுவத்தை வழிப்படுத்த வெளிநாட்டிலுள்ள ராணுவ இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இந்த வகையில் இந்திய ராணுவம் ஆனது ஏழு கிலோ மீட்டர் தூரம் சுற்றளவை குறிவைத்து தாக்கும் ஏவுகணையை தயாரித்து சோதனை முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த ஜூலை 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் இந்திய ராணுவம் துருவஸ்ட்ரா என்ற ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. இது ஹெலிகாப்டரில் இருந்தபடி இலக்கை தாக்குவதே இந்த ஏவுகணையின் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக தரையில் வைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டது, அப்போது ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஏவுகணைகளால் சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள எதிரிநாட்டு டாங்கிகளை குறிவைத்து தாக்கிஅழிக்க முடியும்.

இந்த வகையில் துருவஸ்ட்ரா வழிகாட்டப்பட்ட ஏவுகணையை இந்திய ராணுவம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. துருவஸ்ட்ரா என்பது ஏற்கனவே ராணுவ கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள ஏவுகணை பிரிவாகும். அதன் மேம்படுத்தப்பட்ட பகுதியே தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

3rd ஜெனரேஷன் டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை தார் பாலைவனத்தில் கடந்த ஆண்டு சோதிக்கப்பட்டது. முன்னதாக 12 நாட்களுக்கு மேலாக ஏவுகணையின் தரம் மற்றும் அனைத்து வகையான சோதனைகளும் செய்யப்பட்ட நிலையில் இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

ஏவுகணையை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானிகளையும் அதைப் பரிசோதித்த ராணுவ குழுவினரையும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி புகழ்ந்துள்ளார்.

Previous articleசாத்தான்குளம் தந்தை மகன் கொலையை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்
Next article50 ஆயிரத்தை தாண்டிய 10 கிராம் தங்கத்தின் விலை.? வரலாறு காணாத மாற்றம்.!!