தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இதன் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுமதி கிடையாது. மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. காய்கறி கடை, மளிகைக்கடை, இறைச்சி கடை போன்றவை செயல்பட தடை. தேவையில்லாத காரணங்களுக்கு மக்கள் வெளியில் செல்ல கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
உணவகங்கள், தேனீர் கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. இருப்பினும் அத்தியாவசிய பணியில் ஈடுபடும் நபர்களுக்காக மிக சொற்பமான பெட்ரோல் பங்குகள் செயல்படும். மேலும் மருந்து கடைகள் மற்றும் மருத்துவமனைகள் வழக்கம்போல செயல்படும் பால் கடைகளுக்கு குறிப்பிட்ட காலை நேரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.