சுருளி அருவி தமிழ்நாடு, தேனி மாவட்டத்தில் உத்தமபாளையத்திலிருந்து 18 கி.மீ தொலைவிலும், கம்பம் நகரிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத்தலம். ஆன்மீக தலமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சுருளி அருவி.
40 அடி உயரம் உள்ள இந்த அருவியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலான நாட்களில் நீர்ப் போக்குவரத்து அதிகமாய் இருப்பதால் அப்போது நிறைய மக்களைக் காணலாம். மேலும் இங்குள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. இதிகாசமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் புகழ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கீழ்ச் சுருளி, மேல்ச்சுருளி என இரு இடங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த மார்ச் முதல் ஜூலை வரை மழை பெய்யாததால் இந்த அருவியில் நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.அப்பொழுது பொழியும் தென்மேற்கு பருவமழையால் நீர்த்தேக்க இடங்கள் நிறைந்து நீர்வரத்து வந்த நிலையில் மறுபடியும் நீர்வரத்து குறைந்துள்ளது.
குறிப்பாக குளிக்க கூட முடியாத அளவிற்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஊரடங்கு காரணமாக இந்த பகுதியில் தற்போது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.