தங்கத்தின் விலை தற்போது சரமாரியாக உயர்ந்துள்ளது. வரலாற்றில் எப்போதும் இந்த விலைக்கு தங்கம் விற்றிருக்கவில்லை.
ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில் முனைவோர் என அனைவரும் முதலீடு செய்பவர்கள் தற்போது வழக்கத்தை மாற்றி, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். பாதுகாப்பு கருதியே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் தொழில்துறை மற்றும் வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மட்டும் கிடுகிடுவென்று ஏற்றம் கண்டுள்ளது. இதில் கலால் வரி, உற்பத்தி வரி, ஜிஎஸ்டி போன்ற வரிகளில் இருந்து இவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது.
தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ரூ.4978 க்கு விற்கப்படுகிறது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 874 ரூபாயாக உயர்ந்து, ரூ40,104 க்கு விற்கப்படுகிறது.