நாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை

0
148

ஹாங்காங்கில் COVID-19 நோய்ப்பரவல் காரணமாக இரண்டு பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22 ஆம் தேதியிலிருந்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குப் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் முதன்முறை மக்கள் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் புதன்கிழமையிலிருந்து புதிய விதி நடப்புக்கு வரும்.

மக்கள் முகக்கவசம் அணியாததே ஹாங்காங்கில் நோய்ப்பரவல் மோசமடையக் காரணம் என்று சுகாதார அமைச்சர் சோஃபியா சான்  கூறியிருந்தார். ஹாங்காங்கிற்கு இது முக்கிய காலகட்டம் என்ற அவர், மக்கள் பொறுமையாக, முடிந்தவரை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொண்டார். ஹாங்காங்கில் 2,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் இறந்துள்ளனர். இந்த மாதம் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Previous articleஇந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 
Next articleபென் ஸ்டோக்ஸ் எந்த ஒரு கேப்டனுக்கும் கனவு வீரராக இருப்பார் – கவுதம் காம்பிர்