குரூப்-4 தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இன்று பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்!

0
171
GROUB4
GROUB4

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வின் மூலம் தேர்ச்சி அடைந்தவர்கள் தங்களுக்கான துறையைத் தேர்வு செய்துள்ளனர்.

அப்படி நெடுஞ்சாலைத் துறையை 105 இளநிலை உதவியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்,

எனவே நெடுஞ்சாலைத் துறையில் 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி  தெரிவு பணி  ஆணைகளை 27.07.2020 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கியுள்ளார். 

மீதமுள்ள துறையை தேர்வு செய்தவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தனது அறிக்கையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைக் கேட்டு, குரூப்-4 தேர்ச்சியடைந்த அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் கூடிய விரைவில் மீதம் உள்ளவர்களுக்கும் பணி நியமன ஆணை வந்துவிடும் என்ற நம்பிக்கையிலும் உள்ளனர்.

Previous articleகொரோனா நோய்த்தொற்றை அடையாளம் காண நாய்களுக்குப் பயிற்சி
Next articleகும்பலாக வீட்டின் மொட்டை மாடியில் சூதாடிய பிரபல நடிகர் கைது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here