நடிகர் சூர்யா கார்த்திக்கு வந்த சோதனை: அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

கொரோனா பொது முடக்கத்தான், உலகமே ஸ்தம்பித்து போன நிலையில் திரையரங்கு அனைத்தும் மூடப்பட்டது. இந்த நிலையில் பல்வேறு திரைப்படங்கள் OTT தளத்தில் வெளியாகி வருகிறது

இதேபோன்று ஜோதிகா நடிப்பில் வெளியான “பொன்மகள்வந்தாள்” திரைப்படமும் OTT தளத்தில் வெளியானது. இதற்கு பல்வேறு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்பொழுது சூர்யா சிவகுமார் அவருடைய குடும்பத்தினர் படத்தை திரையரங்கில் திரையிடப்பட்ட இல்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் வெளியிட்டுள்ளனர்.

இது நீண்ட நாட்களுக்கு முன்பு எழுந்த பிரச்சினை என்றாலும், தற்பொழுது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியதாவது: “எதிர்ப்புகளை மீறி கடந்த மே மாதத்தில் நடிகர் சூர்யா தயாரித்த “பொன்மகள்வந்தாள்”  திரைப்படத்தை OTT தளத்தில் ரிலீஸ் செய்ததால் நடிகர் சிவக்குமார் குடும்பத்தினரின் திரைப்படங்களை திரையரங்கில் வெளியிடப் போவதில்லை என்ற முடிவில் உறுதியாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்,

இது குறித்து சூர்யா, ஜோதிகா, கார்த்திக் ஆகியோரின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியையும்  கலக்கத்தையும் உள்ளனர்.

Leave a Comment