தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டது AICTE

0
120
AICTE
AICTE

தமிழகத்தில் 2020-2021-ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜீலை 15 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 6-ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில்,இன்று நாடு முழுவதும் பொறியியல் படிப்பு வழங்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியல் மற்றும் அவற்றில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வெளியிட்டது.

அதன் படி தமிழ்நாட்டில் அரசு,அரசு உதவி பெறும் மற்றும்  தனியார்
கல்லூரிகள் என  500 பொறியியல் கல்லூரிகள் உள்ளது என்றும் அவற்றுள் இளநிலை படிப்புகளுக்கு ( BE /B.Tech) 2,64,264 இடங்களும் மற்றும் முதுகலை படிப்புகளுக்கு 30,306 இடங்களும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

AICTE
AICTE

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் உள்ள பொறியியல் படிப்பிற்கான இடங்கள் குறித்து   உயர்கல்வித்துறைக்கு தனியாக அறிவிக்குமாறு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது .

Previous article35 ஆண்டுகளாக இழந்த உரிமையை மீட்க மத்திய அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்
Next articleஆம் !! சித்த ஆயுர்வேத மருத்துவம் எங்களை காப்பாற்றியது – விஷால் உருக்கம்!