பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அமரீந்தர் சிங் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார் அதன் பின் தேர்தலில் வெற்றிப்பெற்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரானார்.
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கமுடியாத சூழலால் இணைய வழி கல்வி பற்றி அந்தந்த மாநில அரசுகள் ஆலோசித்து வருகிற சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு 50,000 ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அலுவகம் அறிவித்துள்ளது.
மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில், இந்த ஆண்டிற்கான, சேர்க்கை,கல்வி கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்துள்ளது.கல்வி ஆண்டு 2020-21 சேர்க்கை,மற்றும் கல்விக் கட்டணங்களை மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், எந்தவொரு மாணவரிடமிருந்தும் வசூலிக்கக் கூடாது அவ்வாறு வசூலிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.