பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி மும்பையில் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர் கடைசியாக நடித்த படம் “தில் பேச்சாரா” ஆனது “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட படக்குழு முடிவு செய்த நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜூலை மாதம் 24-ம் தேதி இத்திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட்டது. சுஷாந்துக்காக தில் பேச்சாரா திரைப்படத்தை அனைவரும் பார்க்கும் விதத்தில் இலவசமாக ஹாட் ஸ்டார் வெளியிட்டது.
இந்தப்படம் வெளியான 24 மணிநேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதைக்கொண்டு பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்களின் கணிப்பின்படி பார்த்தால், இப்படத்தை திரையரங்கில் திரையிட்டு இருந்தால் சுமார் ரூ.2000கோடி வசூல் ஆகி இருக்கும் என்ற வியப்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் வரிசையில் ‘தில் பேச்சாரா’ படமும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘தில் பேச்சாரா’படத்தைப் பார்த்த 95 மில்லியன் பார்வையாளர்கள் அனைவருமே சுஷாந்த் சிங் ராஜ்புத்- க்கு அஞ்சலி செலுத்தியதாகவே தங்கள் மனதை திருப்திப்படுத்திக் கொள்கின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்- தின் இழப்பானது ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.